Oct 30, 2025
Thisaigal NewsYouTube
கம்போடியாவிற்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தொடர்கிறது
உலகச் செய்திகள்

கம்போடியாவிற்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தொடர்கிறது

Share:

சிங்கப்பூர், ஜூலை.28-

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்த போதிலும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தொடரும் என்று அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் விமானப் பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ எப்போதுமே முன்னுரிமை வழங்கி வரும் என்று எஸ்ஐஏ குழுமத்தின் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வரும் பகுதிகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை கடந்த ஜூலை 24 ஆம் தேதி வன்முறையாக மாறியது. இரு நாடுகளின் இராணுவப் படைகள் பல இடங்களில் மோதிக் கொண்டன. இதில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

Related News