Oct 22, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உலகச் செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Share:

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புத் துறையினருடன் கலந்துரையாடி அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Related News