Oct 19, 2025
Thisaigal NewsYouTube
காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்: காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண் பேட்டி
உலகச் செய்திகள்

காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்: காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண் பேட்டி

Share:

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்தனர்.

போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களை பத்திரமாக மீட்டன.

இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 13-ந்தேதி காசா எல்லையை கடந்து எகிப்தின் கெய்ரோ சென்றடைந்தனர். தற்போது அங்கிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'காசாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

காசா நிலவரம் குறித்து அவர் கூறும்போது, 'காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவும் இல்லை.

தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு' என பதறியடி கூறினார்.

Related News