Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மின்சார வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மின்சார வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில்  7 பேர் பலி

சித்வான், ஜூன்.21-

நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் பேருந்து ஒன்று மின்சார வாகனத்துடன் மோதியதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

அந்த பேருந்து சித்வான் மாவட்டத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் தங்காதியில் இருந்து காகர்பிட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டது.

இதில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →