Oct 20, 2025
Thisaigal NewsYouTube
24 மீனவர்கள் விடுதலை.
உலகச் செய்திகள்

24 மீனவர்கள் விடுதலை.

Share:

இந்தியா, ஏப்ரல் 04-

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், மீனவர் ஒருவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்வதும், படகுகளை சிறை பிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் ஒருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு படகுகளை அரசுடைமை ஆக்கி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணத்தில் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, இரண்டு படகுகளை நாட்டுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது தமிழக மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News