Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அடித்து நொறுக்கும் இந்தியா.. 41 கனடா தூதர்களை ஒரே வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
உலகச் செய்திகள்

அடித்து நொறுக்கும் இந்தியா.. 41 கனடா தூதர்களை ஒரே வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

Share:

ஒட்டாவா: கனடா உடனான மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்று வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் 40 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நிலையில், ஆதாரத்தை வெளியிடுமாறும் வலியுறுத்தியது. இருப்பினும், எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடாமல் கனடா தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தியா கனடா மோதல்: இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டை சேர்ந்தோருக்கு விசா வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது. இதற்கிடையே அடுத்தகட்ட நடவடிக்கையாக அக்டோபர் 10ஆம் தேதிக்குள் சுமார் 40 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10க்கு பிறகு கனடா தூதர்கள் நாட்டில் தங்கியிருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு மொத்தம் 61 கனடா தூதர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையைக் குறைக்குமாறு இந்தியா வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கனடா இடையே மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்வதை இது காட்டுவதாக உள்ளது.

Related News