பெய்ஜிங், ஆகஸ்ட்.24-
சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பலியாகினர். நான்கு பேரைக் காணவில்லை. சீனாவின் சிச்சுவான் - கிவிங்ஹாய் மாகாணத்திற்கு இடையேயான ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, கிவிங்ஹாய் மாகாணத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டீல் கம்பியை இறுக்கும் பணியின் போது, கம்பி அறுத்ததால் இப்பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில், 12 பேர் பலியாகினர், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.