Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்தோடு படுகொலை
உலகச் செய்திகள்

இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்தோடு படுகொலை

Share:

இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஜஸ்தீப் சிங். 36 வயதான இவர் அமெரிககாவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை இவர் தமது குடும்பத்துடன் மெர்சிட் கவுன்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார்.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் ஜஸ்தீப் சிங்கை குடும்பத்துடன் கடத்தினர். அமெரிக்கா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில்,ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இத்தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இண்டியானா சாலை - ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் சடலங்கள் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த போலீசார், அது ஜஸ்தீப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்தான் என்பதை உறுதி செய்தனர்.

இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் என்ற நபர் கைது செய்யப்பட்டதாகவும், போலீஸ் காவலில் இருந்தபோது அவர் தற்கொலைக்கு முயன்றததால், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவி்த்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்தோடு படுகொலை | Thisaigal News