Jun 13, 2026
Thisaigal NewsYouTube
நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் பலி
உலகச் செய்திகள்

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் பலி

Share:

கட்மாண்டு, அக்டோபர்.05-

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நேபாளத்தின் ஏழு பகுதிகளில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

மீட்பு பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இருக்கின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!