Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஐதராபாத் இரசாயன ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் மரணம்
உலகச் செய்திகள்

ஐதராபாத் இரசாயன ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் மரணம்

Share:

ஐதராபாத், ஜூன்.30-

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள இரசாயன ஆலையொன்றில் டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாயினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அணு உலை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மிக பலத்த வெடிப்பு காரணமாக சுற்றியுள்ள கட்டிடங்கள் குலுங்கின. தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. இந்த வெடிப்பில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related News