டக்கா, டிசம்பர்.30-
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்.
80 வயதான கலிதா, வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த 1991 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, வங்காளதேசத்தில் 2 முறை பிரதமராகப் பதவி வகித்தார்.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் கலிதா ஜியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.








