Oct 20, 2025
Thisaigal NewsYouTube
புதிய X யூசர்ஸ் கவனத்திற்கு, "இனி எல்லாத்துக்கும் காசு தான்" - எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி தகவல்!
உலகச் செய்திகள்

புதிய X யூசர்ஸ் கவனத்திற்கு, "இனி எல்லாத்துக்கும் காசு தான்" - எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி தகவல்!

Share:

எலான் மஸ்க், ஏப்ரல் 16-

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க். அதன் பிறகு அதன் பெயரை X என்று மாற்றியது மட்டுமல்லாமல் அதன் லோகோவை வைத்து சில விளையாட்டுகளும் விளையாடினார்.

எலான் மஸ்க் தனது Xல் ஒரு புதிய கட்டண சேவையை கொண்டு வருகிறார், இனி நீங்கள் ஒரு இடுகையை பதிவிட விரும்பினால், அல்லது ஒரு இடுகைக்கு ரிப்ளை பதிலளிக்க, ஏன் ஒரு பதிவை லைக் செய்யவேண்டும் என்றாலும் அதற்கு கட்டணம் வசூல் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற போட் மற்றும் ஸ்பேம் போன்ற சிக்கல்களை தவிர்க்க மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், X தளத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதே அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று அவர் கருதுகிறார்.

X தளத்தில் உள்ளவர்களை இலவசமாகப் பின்தொடரவும், அதில் பிரவுஸ் செய்யும் இலவசமாக அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் Xல் சேர விரும்பும் அனைவருக்கும் வருடாந்திர கட்டணம் விதிக்கப்படும். “நீங்கள் இடுகையிடுவதற்கு, லைக் செய்வதற்கு, புக்மார்க் செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் முன், புதிய கணக்குகள் சிறிய வருடாந்திரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இது ஸ்பேமைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை உருவாக்குவதற்கும் செய்யப்படும் புது மாற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்க் தன் X பிளாட்ஃபார்மில் சில பெரிய மாற்றங்களைத் திட்டமிட்டு வருகிறார், மேலும் அதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அம்சங்களை எக்ஸ் சார்ஜ் செய்யக்கூடியதாக மாற்றவுள்ளது.

எலான் மஸ்கின் இந்த நடவடிக்கை ஏற்கனவே X பக்கத்தின் மீதுள்ள பல அதிருப்தியை இன்னும் அதிகமாக்கும் என்று பலர் கூறினாலும், X பக்கத்தில் உள்ள சில தேவையற்ற பாட்ஸ் மற்றும் ஸ்பேம்களை நீக்க இது அவசியமானது என்றும் சிலர் கூறிவருகின்றனர். அதே போல போலியான பாட்ஸ் காரணமாக சில உண்மையான பயனர்கள் X பக்கத்தில் நுழையாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த கட்டண மாறுபாடு எப்போது அமலாகும் என்பது குறித்து தெரியவில்லை, வருடாந்தரக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்றும் தெரியவில்லை. ஆனால் புதிய பயனர்களுக்கு ஆண்டு முழுவதுக்கும் $1 (சுமார் ரூ.82) வசூலிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. X ஏற்கனவே அதன் பிரீமியம் சந்தாவை வெவ்வேறு வகைகளில் வழங்குகிறது, இதில் பிரீமியம்+ பயனர்களுக்கான Grok AI ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News