Oct 26, 2025
Thisaigal NewsYouTube
டில்லியில் இடிந்து விழுந்த கட்டடம்: 11 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

டில்லியில் இடிந்து விழுந்த கட்டடம்: 11 பேர் உயிரிழப்பு

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.19-

டில்லியில் பலமாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கித் தவித்தனர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முஸ்தபாபாத் நகரில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கட்டடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அங்குள்ளோர் அச்சம் அடைந்து ஓடினர்.

சரிந்து விழுந்த கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், உள்ளூர் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். மீட்புப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விரைவில் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

Related News