நியூ யார்க், செப்டம்பர்.17-
பிரபல யூடியூப் நிறுவனம் தனது பயனர்களுக்காக, AI தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய புதிய அம்சங்களை இணைத்துள்ளது.
இதன் மூலம் யூடியூப்பில் காணொளி வெளியிடுபவர்கள், மிக எளிதாக தங்களது காணொளிகளைத் தொகுத்து, அதனை சுவாரசியமான காணொளியாகப் பதிவிட முடியும் என்று யூடியூப் கூறியுள்ளது.
இது குறித்து யூடியூப் தலைமை செயல் அதிகாரி Neal Mohan கூறுகையில், இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களானது, படைப்பாற்றலையும் கதை சொல்லும் திறனையும் அதிகரித்து அடுத்தக் கட்ட பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், யூடியூப் தனது உள்ளடக்க உருவாக்குனர்களுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, யூடியூப்பை கூகுள் வாங்கியது முதல், உலகின் மிகப் பிரபலமான இலவச ஆன்லைன் வீடியோ தளமாக வளர்ந்து, தற்போது பில்லியன் கணக்கான பயனர்களைப் பெற்றுள்ளது.