Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ரத்தத்திற்கு ரத்தம் நாங்கள் பழிவாங்குவோம் - சபதம் ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப்
உலகச் செய்திகள்

ரத்தத்திற்கு ரத்தம் நாங்கள் பழிவாங்குவோம் - சபதம் ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப்

Share:

பஹல்காம், மே. 08-

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் நடத்தியது மூலம் இந்தியா மிகப் பெரியத் தவற்றைச் செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநபர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தனது மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப், இந்தியாவின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று வர்ணித்தார்.

இந்த தாக்குதலினால், பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைக்கலாம். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஷேபாஸ் ஷாரிஃப் சூளுரைத்தார்.

தனது நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை இந்தியா மறந்து விட்டது. இந்தியா நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தானில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்த னர். பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று ஷேபாஸ் ஷாரிஃப் சபதம் எடுத்துள்ளார்.

Related News