மாண்டி, ஜூலை.13-
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்ற கார் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது. இதனால், அவர் உயிர் தப்பினார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை மற்றும் மேலும் சில காரணங்களால், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மாண்டி மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டியில் மட்டும் 207 சாலைகள் உட்பட 249 சாலைகள் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, ஹிமாச்சலில் உள்ள 12 மாவட்டங்களில் பல இடங்களில் ஜூலை 18ம் தேதி வரையில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெய்ராம் தாகூர் சென்ற கார், நிலச்சரிவில் இருந்து சிக்காமல் தப்பியது. அவர் கார் சென்ற சாலையில் கற்கள் உருண்டோடி விழுந்துள்ளன.
உடனடியாக காரை விட்டு இறங்கிய ஜெய்ராம் தாகூர், விரைந்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதன் வழி அவர் உயிர் தப்பினார்.








