சிங்கப்பூர், ஆகஸ்ட்.04-
தென் கொரியா தலைநகர் சோலுக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது.
இச்சம்பவம் இன்று காலை 9.55 மணியளவில் நிகழ்ந்தது. SQ600 என்ற அந்த விமானம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து காலை 8.15 மணியளவில் சோலுக்குப் புறப்பட்டது.
அந்த போயிங் 787-10 ரக விமானம், சோலில் பிற்பகல் 3.30 மணிக்கு தலையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் விமானத்தை சாங்கி விமான நிலையத்திற்கே திருப்புவதற்கு விமானி முடிவெடுத்தார்.
விமானம், மலேசிய வான் போக்குவரத்துப் பாதையிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்புவதை விமானப் பயணங்களைக் காட்டும் ஃபிளைட் அவேர் தரவில் தெரிய வந்துள்ளது.