Jun 18, 2026
Thisaigal NewsYouTube
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க்-ன் உதவியை நாடுகிறதா நாசா
உலகச் செய்திகள்

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க்-ன் உதவியை நாடுகிறதா நாசா

Share:

இந்தியா, ஜூன் 26-

ஜூன் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய விண்வெளி வீரர்கள், விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கியுள்ள நிலையில் அவர்கள் பூமிக்கு திரும்பும் தேதி இறுதி செய்யப்படவில்லை.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திரும்ப முடியாத இரு விண்வெளி வீரர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மாோர் ஆகியோருடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்வெளி வாகனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் சென்றடைந்தது.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பணிகளில் இருவரும் ஈடுபட்டு விட்டு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாத அளவுக்கு வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகளை சந்தித்து உள்ளது.

பூமிக்கு திரும்ப முடியாமல் இருக்கும் இருவீரர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற கலத்தின் உதவியை நாடலாம் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விண்வெளியில் இருக்கும் இரு வீரர்களையும் ஜூலை முதல் வாரத்துக்குள் பூமிக்கு அழைத்து வர பணிகளை நாசா தீவிரப்படுத்தியுள்ளது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்