Jan 17, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து: 22 பேர் பலி
உலகச் செய்திகள்

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து: 22 பேர் பலி

Share:

பெய்ஜிங், ஏப்ரல்.29-

சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உணவகம் ஒன்று உள்ளது. 3 மாடி கொண்ட இந்த கட்டடத்தில் தீ பரவியது. இதற்கானக் காரணம் குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும், எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. அந்த உணவகத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல் வழியாக தீப்பிழம்புகள் கிளம்பின. அந்த பகுதி புகை மூட்டமாகக் காணப்பட்டது.

இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News