Oct 21, 2025
Thisaigal NewsYouTube
எனக்கு கல்யாணமே ஆகல.. ஆனா 12 நாடுகளில் 100 குழந்தைகள் இருக்காங்க! - ஷாக் கொடுத்த டெலிகிராம் ஓனர்!
உலகச் செய்திகள்

எனக்கு கல்யாணமே ஆகல.. ஆனா 12 நாடுகளில் 100 குழந்தைகள் இருக்காங்க! - ஷாக் கொடுத்த டெலிகிராம் ஓனர்!

Share:

ரஷ்யா, ஆகஸ்ட் 03-

பிரபல சமூக வலைதளமான டெலிகிராமின் இணை நிறுவனர் தான் 12 நாடுகளில் உள்ள 100 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பலரால் பிரபலமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் டெலிகிராம் முக்கியமானதாகும். அதன் இணை நிறுவனராகவும் தலைமை அதிகாரியாகவும் இருந்து வருபவர் ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ் (Pavel Durov). 39 வயதாகும் பாவெலுக்கு இதுவரை திருமணமாகவில்லை. ஆனால் விந்தணு தானம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள 100 குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக உள்ளதாக பாவெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், முதன்முதலில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்ததால் விந்தணு தானம் செய்ததாகவும், அதன்பின்னர் மருத்துவர்கள் விந்தணு தானத்தின் அவசியம் குறித்து கூறியதால் தொடர்ந்து விந்தணு தானம் செய்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் 12 நாடுகளில் 100க்கும் அதிகமான தம்பதிகள் குழந்தை பெற உதவியுள்ள நிலையில் வருங்காலத்திலும் ஐவிஎஃப் கிளினிக்கில் உறையவைக்கப்பட்ட விந்தணுக்கள் மூலமாக பல குழந்தைகள் பிறக்க காரணமாக அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News