Jun 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் உயிரிழப்பு

Share:

வாஷிங்டன், அக்டோபர்.09-

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸிக் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அதற்குள் 3 பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

அண்மைய காலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டிக் 4 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!