Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாம் அறிவிப்பு
உலகச் செய்திகள்

சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

Share:

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாமில், சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, நுவன் துஷார, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, சமிந்து விக்கிரமசிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News