சிங்கப்பூர், மார்ச் 8 -
சிங்கப்பூரில் பாதுகாவலராகப் பணிபுரியும் ஆடவர் ஒருவர் இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.அவருடைய வேலைக்கு அப்பால் மற்றவருக்குத் தாமாக முன்வந்து உதவியது பலரை நெகிழச்செய்தது..கனத்த மழை.. பாதசாரிகள் மழையில் நனையாமல் இருக்க அவர் குடை பிடித்து அருகே இருந்த பாலத்திற்கு அழைத்துச் சென்றார்.
எண். 51 கப்பேஜ் சாலையில் அந்த ஆடவர் ஒரு பெண்மணிக்கு உதவியதைப் பார்த்ததாக இணையவாசி ஒருவர் COMPLAINT SINGAPORE Facebook பக்கத்தில் பதிவிட்டார்.8 வோர்ல்ட் செய்தித்தளம் அந்த விவரத்தைத் தெரிவித்தது.பெண்ணைத் தவிர இன்னும் பலருக்கும் பாதுகாவலர் உதவிக்கரம் நீட்டினார்.
முகநுல்லில் அந்தப் பதிவிற்கு 1,000 விருப்பக்குறிகள் வந்தன.பாதுகாவலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அவர்களுக்குப் பாராட்டுக் கிடைப்பதை இணையவாசி ஒருவர் சுட்டினார்.