ஜெய்ப்பூர், ஆகஸ்ட்.27-
ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியைப் பின்பற்றிச் சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கூகுள் மேப் காட்டும் வழியை நம்பி ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. அவ்வகையில், ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியைப் பின்பற்றி 9 பேரை ஏற்றிச் சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மாயமான ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் மேப்பில் அவ்விவரம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் தான் வேனில் சென்றவர்கள், கூகுள் மேப் பாதையில் சென்று ஆற்றில் விழுந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.