Oct 20, 2025
Thisaigal NewsYouTube
Chile Earthquake : சிலி நாட்டை உலுக்கிய சக்திவாந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?
உலகச் செய்திகள்

Chile Earthquake : சிலி நாட்டை உலுக்கிய சக்திவாந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

Share:

Chile Earthquake: சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டா என்ற பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டா என்ற பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் 128 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 9:51 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சேதம் மற்றும் பாதிப்பு குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ நான் ஏற்கனவே பிராந்திய பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டுள்ளேன், இதுவரை பெரிய சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் குழுக்கள் தகவல்களை சேகரித்து வருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் சிலியும் ஒன்று. இது பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளது. அதாவது பூமியின் பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் கொந்தளிப்பான பகுதி தான் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது. இதனால் சிலி நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம், வடக்கு சிலியின் தாராபாகாவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related News