மாஸ்கோ, ஆகஸ்ட்.02-
ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டில் பதிவான நிலநடுக்கங்களிலேயே இது வலிமையானதாகும். ஆனால் எந்த உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று அந்நாடு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குரில் தீவு பகுதியில் கிழக்கே இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை இல்லை. சுனாமி பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த 16 மணி நேரத்திற்குள், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக 125 முறை பின் அதிர்வுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.








