Oct 28, 2025
Thisaigal NewsYouTube
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது: இந்திய விமானப்படை உறுதி
உலகச் செய்திகள்

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது: இந்திய விமானப்படை உறுதி

Share:

புதுடெல்லி, மே.11-

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாதத் தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம். விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை. சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும், பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

Related News

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!