Jan 11, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்
உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்

Share:

ஆஸ்திரேலியா, ஜனவரி.11-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் காட்டுத் தீ காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளை பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத் தீ இன்னும் பல நாட்களுக்குத் தொடரும் அபாயம் இருப்பதாக வானிலை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Related News