கோலாலம்பூர், அக்டோபர்.25-
ஆசியானின் 11 ஆவது உறுப்பு நாடாக தீமோர் லெஸ்டே, இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அணுவாயுதம் இல்லாத தென்கிழக்காசிய பிராந்திய உடன்பாட்டு சாசனத்திலும் அது இணைந்தது.
ஓர் உறுப்பு நாடாக தீமோர் லெஸ்டே இணைந்தது மூலம் இந்த பிராந்தியத்தில் இறையாண்மையைக் கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டையும் உள்ளடக்கிய ஆசியான் கட்டமைப்பில் அதன் பரப்பளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
ஆசியானின் சாசனம் என்பது ஓர் அடிப்படை ஆவண அடிப்படையில் மட்டுமின்றி, உறுப்பு நாடுகளுடன் கொண்டிருக்கின்ற கூட்டு இலக்கின் உயிர் துடிப்பாகவும் விளங்குகிறது என்ற முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் தொடங்கியுள்ள 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆவணங்களை ஒப்படைக்கும் சடங்கின் போது உரையாற்றுகையில் முகமட் ஹசான் இதனைத் தெரிவித்தார்.








