இஸ்லாமாபாத், செப்டம்பர்.07-
பாகிஸ்தானில், கடந்த ஜூன் மாத இறுதியில் தொடங்கிய பருவமழை தொடர்கிறது. இதில், பஞ்சாப் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. மொத்தம், 13 கோடி மக்கள் தொகை உள்ள இப்பகுதி, கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து தொடர்ந்து மழையைச் சந்தித்து வருகிறது.
இங்கு, ஆக., 23ல் இருந்து இதுவரை, மழை மற்றும் வெள்ளத்துக்கு, 50 பேர் பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தில், 3,900 கிராமங்கள் மூழ்கியுள்ளன.
இதனால், 40 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.