Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஈரான் அதிபரை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர், அந்நாட்டின் வடமேற்கு மலை பகுதியில் விபத்துக்குள்ளானது.
உலகச் செய்திகள்

ஈரான் அதிபரை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர், அந்நாட்டின் வடமேற்கு மலை பகுதியில் விபத்துக்குள்ளானது.

Share:

ஈரான் , மே 20-

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட இதர சில முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் சென்ற HELICOPTER, அந்நாட்டின் வடமேற்கு மலை பகுதியில் அவசரமாக தரையிறங்கியதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் - IRNA தெரிவித்துள்ளது.

கிழக்கு அஜர்பைஜான்-னிலுள்ள வர்சகான் நகருக்கும் ஜோல்ஃபா நகருக்கும் இடைப்பட்ட டிஸ்மார் காட்டில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடனான அணை திறப்பு நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசி கலந்துக்கொண்டு திரும்பும் வழியில், அந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மிகப் பெரிய சத்தத்தை கேட்டுத்துள்ளதாக IRNA செய்தி வெளியிட்டுள்ள சூழலில், அதிபரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ட்ரான், மோப்ப நாய்களைக் கொண்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தேடுதல் மீட்பு படையினர், சம்பவ பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர, ஈரான் இராணுவ படையினரும்
களத்தில் இறங்கியுள்ளனர்.

இதுவரையில் அந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

சம்பந்தப்பட்ட பகுதி மலைப்பாங்கானது என்பதோடு வானிலை மோசமாக உள்ளதால், தேடி மீட்கும் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News