Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கடற்கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்தியா தீவிரம்
உலகச் செய்திகள்

கடற்கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்தியா தீவிரம்

Share:

அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.

அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.

அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது.

உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது.

இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Related News