Jan 16, 2026
Thisaigal NewsYouTube
தொலைதூரப் பயணத்துக்கான ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமானச் சேவையாக ஸ்கூட்
உலகச் செய்திகள்

தொலைதூரப் பயணத்துக்கான ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமானச் சேவையாக ஸ்கூட்

Share:

சிங்கப்பூர், ஜுன் 27-

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கூட், 2024ஆம் ஆண்டில் தொலைதூரப் பயணங்களுக்கு ஆகச் சிறந்த சேவைகளை வழங்கும் மலிவுக் கட்டண விமானச் சேவையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அனைத்துலகப் போக்குவரத்துச் சேவைகளை மதிப்பிடும் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனத்தின் உலக விமானச் சேவை விருதுகளில் ஸ்கூட்டுக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது. திங்கட்கிழமையன்று (ஜூன் 24) அது அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஸ்கூட் இந்த அம்சத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியாவின் ஏர்ஏ‌ஷியா, 15வது முறையாக ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமானச் சேவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.சென்ற ஆண்டு உலகின் ஆகச் சிறந்த விமானச் சேவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இம்முறை ஒரு நிலை இறங்கியது. கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்சைப் பின்னுக்குத் தள்ளியது.

உலகின் ஆகச் சிறந்த விமானச் சேவை என்ற பெயரைப் பதிக்க இவ்விரு நிறுவனங்களும் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. 2022ஆம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்த கத்தார் ஏர்வேஸ், சென்ற ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்சால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

எனினும், உலகின் ஆகச் சிறந்த விமானச் சிப்பந்திக் குழுவைக் கொண்டுள்ள சேவை, ஆசியாவின் ஆகச் சிறந்த விமானச் சேவை, உலகின் ஆகச் சிறந்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ எனப்படும் முதல்நிலை சொகுசுப் பிரிவை வழங்கும் சேவை போன்ற அங்கீகாரங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இவ்வாண்டு பெற்றுள்ளது.

எட்டாவது முறையாக ஆகச் சிறந்த விமானச் சேவையாக கத்தார் ஏர்வேஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Related News