Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பாப் பாடகர் லியாம் பேய்ன் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
உலகச் செய்திகள்

பாப் பாடகர் லியாம் பேய்ன் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

Share:

'ஒன் டைரக்‌ஷன்' (One Direction) எனப்படும் பிரபல பாப் இசைக்குழுவை சேர்ந்த பாடகர் லியாம் பேய்ன் (Liam Payne) ப்யூனோஸ் ஏரீஸில்-இல் (Buenos Aires) உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31.

புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று அப்பகுதியில் அவருடைய சடலம் கிடப்பது குறித்த செய்தியறிந்து அங்கு சென்ற அவசர குழுவினர் லியாம் பேய்ன் உடலை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு 'எக்ஸ் ஃபேக்டர்' (X Factor) எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் லியாம் பேய்ன் உலகப்புகழ் பெற்றார். அவருடன் அக்குழுவில் ஹாரி ஸ்டைல்ஸ், லூயிஸ் டோம்லின்சன், நியல் ஹோரான் மற்றும் ஸைன் மாலிக் ஆகியோரும் பங்கேற்றுப் பிரபலமடைந்தனர்.

இம்மாதத் துவக்கத்தில், ஒன் டைரக்‌ஷன் இசைக்குழுவில் முன்பு இருந்த நியல் ஹோரானின் இசை நிகழ்ச்சியில் லியாம் பேய்ன் பங்கேற்றார்.

Related News