நியூயார்க், ஜனவரி.10-
அமெரிக்காவின் ஓரிகான், போர்ட்லேண்ட் நகரில் சோதனையின் போது அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் (CBP) மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அனைத்துலக அளவில் தேடப்படும் ஆபத்தான 'ட்ரென் டி அரகுவா' (Tren de Aragua) எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்லேண்டில் ஒரு மருத்துவமனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை அதிகாரிகள் மறித்தனர்.
அதன் போது காரில் இருந்த லூயிஸ் டேவிட் நிக்கோ மொன்காடா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரை நிறுத்தாமல், அதிகாரிகள் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் தற்காப்பிற்காக அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் காயமடைந்தனர். மொன்காடா 2022-லும், அவரது மனைவி 2023-லும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன.








