Nov 14, 2025
Thisaigal NewsYouTube
டில்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம்: லக்னோ மருத்துவர் கைது
உலகச் செய்திகள்

டில்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம்: லக்னோ மருத்துவர் கைது

Share:

லக்னோ, நவம்பர்.13-

டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த 41 வயது மருத்துவர் பர்வேஷ் அன்சாரி என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியதாக லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஷாகீன் ஷாகித்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரி என்ற டாக்டரையும் உ.பி., பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், உ.பி., மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். ' தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்ததில் பர்வேஷ் அன்சாரிக்கு முக்கியப் பங்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.

Related News