அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama).
1975 காலகட்டத்தில் இம்மாநில தலைநகரமான ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ்
(Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர்.
இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) எனும் இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தான் லூசியானா (Louisiana) மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார்.