இந்திய , ஜூலை 03-
இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்ததைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அவருக்கு இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.
இந்திய அணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடியவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணியானது முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று புதிய சரித்திரம் படைத்தது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது.
இதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த நிலையில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு தோனிக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை டிராபியை வென்று கொடுத்த தோனிக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்க ராணுவம் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியது.
இதைத் தொடர்ந்து, அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், நடந்த ராணுவ நிகழ்ச்சியில் தோனிக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்திய அணிக்கு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவிற்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது.
அதாவது, தோனிக்கு, இந்திய டெரிடோரியல் ஆர்மியின் (106 பாரா டெரிடோரியல் ஆர்மி பட்டாலியன்) பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியை கொடுக்கப்பட்டது. ஆக்ரா பயிற்சி முகாமில் இந்திய ராணுவ விமானத்தில் இருந்து 5 பாராசூட் பயிற்சி ஜம்ப்களை முடித்த பிறகு, 2015 ஆம் ஆண்டு தகுதி பெற்ற பராட்ரூப்பர் ஆனார்.
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த பதவி கொடுத்து கௌரவிக்கப்பட்டது. ஆனால், சம்பளம் ஒன்றும் கிடையாது. மேலும், அந்த பதவிக்கான அனைத்து மரியாதைகளும் தோனிக்கு கொடுக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
