Oct 20, 2025
Thisaigal NewsYouTube
Nepal Plane Crash: நேபாளம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!
உலகச் செய்திகள்

Nepal Plane Crash: நேபாளம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

Share:

நேபாளத்தில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 19 பேரில் ஐந்து பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் இருந்து 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானம் சறுக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் விமானம் பற்றி எரிந்தது. பொக்காராவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​இந்த சம்பவம் நடந்ததாக TIA செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா விமானம் விபத்துக்குள்ளானது. சம்பவ இடம் புகை மண்டலம் போன்று காட்சியளித்தது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கிடைத்த இருக்கும் முதல் கட்ட தகவலின்படி 5 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது

Related News