அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி தலைவராக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக குடியரசு கட்சியின் சார்பில் மைக் பென்ஸ் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது மைக் பென்ஸ் துணை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகிய இருவருமே களத்தில் இறங்கி உள்ளதை அடுத்து இருவரில் யாருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஆன ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டு வருகிறது.

Related News

இந்தோனேசியாவில் எரிமலை குமுறியது

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: பின் தங்கியது அமெரிக்கா

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெயுடன் வந்த கப்பலில் தீ: 10 பேர் பலி

வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 16 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் மரணம்
