Nov 13, 2025
Thisaigal NewsYouTube
ரியாத்தைச் சென்றடைந்தார் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்
உலகச் செய்திகள்

ரியாத்தைச் சென்றடைந்தார் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

Share:

ரியாத், நவம்பர்.03-

சவூதி அரேபியாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பாதுகாப்பாக ரியாத்தைச் சென்றடைந்துள்ளார்.

மலேசியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் அதே வேளையில் இரு நாட்டு மக்களும் நன்மை அடையக்கூடிய நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பான ஒத்துழைப்பை விரிவுப்படுத்த மாமன்னரின் இந்த அதிகாரத்துவப் பயணம் அமைந்துள்ளது.

மாமன்னரின் சிறப்பு விமானம், சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, மலேசிய நேரப்படி மாலை 5.30 மணியளவில் ரியாத், ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Related News