Jan 18, 2026
Thisaigal NewsYouTube
உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு
உலகச் செய்திகள்

உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு

Share:

நியூ ஜெர்சி, ஆகஸ்ட்.02-

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடுகளை புதிய உச்சங்களுக்குக் கொண்டுச் சென்றுள்ளது. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.1987ம் ஆண்டு முதல் இத்தகையப் பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

2025ம் ஆண்டு, ஆக.1ம் தேதி நிலவரப்படி உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும். அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த முதல் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரைத் தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

Related News