Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பசிக்கு இரையாகும் பாலஸ்தீன அகதிகள்.. அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்! ஐநாவுக்கான நிதியை நிறுத்தியது
உலகச் செய்திகள்

பசிக்கு இரையாகும் பாலஸ்தீன அகதிகள்.. அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்! ஐநாவுக்கான நிதியை நிறுத்தியது

Share:

நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக ஜப்பான் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.

பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. எனவே மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.

இப்படி இருக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஐ.நா நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின்(UNRWA) பணியாளர்கள் ஈடுபட்டதால் இந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

Related News