ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்து இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு மொராக்கோ.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். அந்தளவுக்குச் சின்ன நாடாக இருந்த மொரோக்கோவில் நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இரவு 11 மணியளவில் இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக் கட்டுகளைப் போல அப்படியே சரிந்தன.
மொராக்கோ: அங்கே சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் மராகேச் என்ற இடத்தின் தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்கப் புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவிகாயுள்ளது. மொராக்கோவின் முக்கிய கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கே அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதிலும் இந்தளவுக்கு ஒரு வலுவான நிலநடுக்கத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே அங்கே கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. கட்டிடங்கள் அனைத்தும் அப்படியே சரிந்து உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த 120 ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.