Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானில் பேருந்தில் சென்ற 9 பேர் சுட்டுக் கொலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானில் பேருந்தில் சென்ற 9 பேர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத், ஜூலை.11-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேருந்தில் சென்ற 9 பேரைக் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளைத் தீவிரமாகச் சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர்.

பலியானவர்களின் உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கானக் காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த காலங்களில் இதே போன்ற சம்பவங்களின் பின்னணியில் பலூச் படையினர் சம்பந்தப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பிரிவினைவாதக் குழுக்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →