Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இன்று நிகழும் முதல் சூரிய கிரகணம்
உலகச் செய்திகள்

இன்று நிகழும் முதல் சூரிய கிரகணம்

Share:

இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஏப்ரல் மாதம் 8ம் தேதி தோன்றுகிறது. இது உலகின் எந்த பகுதியில் தோன்றும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நாம் வாழ்கின்ற இந்த பூமியானது பல்லாயிரம் கோடி வருடங்கள் பழமையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தினமும் ஏதோ ஒரு அதிசய நிகழ்வு இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் பொழுது ஏற்படும் "சூரிய கிரகணம்" இன்று ஏப்ரல் 8ம் தேதி நிகழவுள்ளது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி திங்கள்கிழமை இவ்வாண்டின் முதல் "சந்திர கிரகணம்" நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஏற்படும் இவ்வாண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது என்பது மிகப்பெரிய சோகமாக இருந்தாலும், இணைய வழியாக அதைக் காண பல ஏற்பாடுகளை தொடர்ச்சியாக அறிவியல் சார்ந்த நிறுவனங்கள் செய்து வருகிறது.

இந்த ஆண்டு நிகழ்விற்கும் இந்த முதல் சூரிய கிரகணம் அமெரிக்காவின் வட பகுதியில் தெளிவாக தெரியும். அது மட்டும் அல்லாமல் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் இந்த முழு சூரிய கிரகணத்தை மக்களால் பார்க்க முடியும். இந்த அதிசய நிகழ்வினை காண மக்கள் அனைவரும் பெரும் திரளாக கூடி வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் கடந்த 1970ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 5 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும் மிக நீண்ட சூரிய கிரகணமாக இது இருக்கப் போவதுதான் ஆச்சரியங்களின் உச்சம். இதற்காக விசேஷ ஏற்பாடுகளை நாசா விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். இந்திய நேரப்படி ஏப்ரல் 8ம் தேதி இரவு 9.12 மணிக்கு இந்த கிரகணம் துவங்கி, இரவு 10.08 மணிக்கு முழுமையக சூரியன் மறைந்து, பின் ஏப்ரல் 9ம் தேதி அதிகாலை 2.22 மணிக்கு கிரகணம் முடியவுள்ளது.

இந்நிலையில் இந்த அதிசய நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பிரபல கூகுள் நிறுவனம் ஒரு புதிய அனிமேஷனை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையத்தில் நீங்கள் "சூரிய கிரகணம்" என்று தமிழில் டைப் செய்தால் அந்த அனிமேஷன் வந்து செல்லும். ஆங்கிலத்திலும் "April 8 Eclipse", "Solar Eclipse" போன்ற வார்த்தைகளை கூகுளில் உள்ளிடும்போது அனிமேஷன் வந்து செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இணையவாசிகள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்று வருகிறது.

Related News