தெஹ்ரான்: ஈராக் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பாதுகாப்புப் படை ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் அமைந்துள்ள உளவுத் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான உளவுத் தகவல்களை சேகரிக்கும் பயங்கரவாதக் குழுக்களின் இருப்பிடங்களை அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது,
தாக்குதல்: இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் உள்ள பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈராக் மட்டுமின்றி சிரியாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்தும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் இடங்கள், பயங்கரவாதிகள் தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன.