ரோம், அக்டோபர்.01-
மனிதநேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் “Global Sumud Flotilla” படகுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களின் இம்முயற்சி, அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத் திட்டத்தைச் சீர்குலைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காஸாவிற்கு உதவி செய்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றிணைந்து, இத்தாலியக் கடற்படை போர்க்கப்பல் ஒன்றின் கண்காணிப்பில் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது காஸா கரையோரத்திலிருந்து 160 கடல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அப்படகுகள், இஸ்ரேலியப் படைகளால் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.