ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பின்னணியில் இருக்கும் மோசமான வரலாறு உங்களுக்குத் தெரியுமா.. அந்த ரத்த வரலாறு பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இப்போது கடும் மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்பதே இப்போது அனைவரும் முன்வைக்கும் புகாராக இருக்கிறது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் முன்பு, கனடா நாஜி போர்க் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. கடந்த செப். 25ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வந்திருந்த போது, அப்படி அடைக்கலாம் தரப்பட்ட ஒரு நாஜி வீரருக்குத் தான் ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது.
பெரும் சர்ச்சை: இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் படைப் பிரிவுகளில் ஒன்றில் பணியாற்றிய போலந்து நாட்டில் பிறந்த உக்ரைனியரான யாரோஸ்லாவ் ஹன்கா என்பவர் தான் கவுரவிக்கப்பட்டார். இதற்கு உலகெங்கும் இருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கனடா சபாநாயகர் தனது பதவியையே ராஜிமா செய்யும் அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல கனடா பிரதமரும் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கனடா புகலிடம் தருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்தச் சம்பவம் ட்ரூடோ அரசுக்கு பெரும் தர்ம சங்கடமாக அமைந்தது. கனடா பேச்சு சுதந்திரத்தை முழுமையாக ஆதரிக்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால், இதே கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மட்டுமில்லை.. நாஜி படையினருக்கும் ஆதரவாக இருந்துள்ளனர். அது உங்களுக்கு தெரியுமா.