Oct 17, 2025
Thisaigal NewsYouTube
கேபிள் கார் அறுந்து விழுந்ததில் இந்தியர் உட்பட 7 துறவியர் பலி
உலகச் செய்திகள்

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் இந்தியர் உட்பட 7 துறவியர் பலி

Share:

கொழும்பு, செப்டம்பர்.26-

இலங்கையில், கேபிள் கார் விபத்தில் இந்தியர் உட்பட புத்த துறவியர் ஏழு பேர் உயிரிழந்ததது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள நிகவெரட்டியாவில், புகழ்பெற்ற புத்த மடாலயம் அமைந்துள்ளது. இது வனப்பகுதி என்பதால், கேபிள் கார் எனப்படும் கம்பியில் இயங்கும் ஒரு பெட்டி மட்டும் உள்ள ரயில் சேவை உள்ளது.

அந்த கேபிள் கார் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தைச் சேர்ந்த ஏழு துறவியர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து நிகழ்ந்த மடாலயம் தியானங்களுக்கு பெயர் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்வர்.

Related News